“பியுமி ஹன்சமாலியின் தொலைப்பேசி அழைப்பு” -பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்!

“பியுமி ஹன்சமாலியின் தொலைப்பேசி அழைப்பு” -பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்!


இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அவரைப் பற்றி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்ற பேருந்தைத் திருப்பிவிடுமாறு அறிவுறுத்தியதாக வெளியான அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்றும் அவர் கூறினார்.

தனது மகனின் திருமணமும் குறித்த ஹோட்டலில் இடம்பெற்றதாக பரவி வரும் செய்தியும் பொய்யானது என்றும் தெரிவித்தார்.

பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் மீது சிஐடியினர் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.