ஒன்லைன் கல்வி முறையால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவர்கள்! -கல்வி அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒன்லைன் கல்வி முறையால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவர்கள்! -கல்வி அமைச்சு


தற்போது நடைமுறையிலுள்ள இணையவழி கல்வி முறையின் மூலம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன அழுத்தத்தங்களுக்குள்ளாகிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


மாணவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதவாறு, ஓய்வு நேரம் வழங்காமல் நாள் முழுதும் வகுப்புக்களை நடத்தல் மற்றும் சிலவேளைகளில் காலை முதல் நள்ளிரவு வரை வகுப்புகளை நடத்துவது போன்ற சம்பவங்கள் முக்கியமாக குறிப்பிடப்படுகின்றன.


மாணவர்கள் இணையவழி மூலமான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பாடசாலை சீருடைகளை அணிய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும், ஆசிரியைகள் சாரி அல்லது ஒசரி போன்ற உடைகளை அணிந்து பாடங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.


எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகாதவாறு மிகவும் பொருத்தமான ஆடைகளை அணிந்து, உரிய நேரத்திற்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.