கத்தார் உள்ளிட்ட நான்கு நாடுகளின் இஸ்லாமிய போதகர்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தார் உள்ளிட்ட நான்கு நாடுகளின் இஸ்லாமிய போதகர்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பு!


கத்தார், பாகிஸ்தான், குவைத் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து இஸ்லாமிய போதகர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

மேலும் அதில், இவ்வாறான மத போதகர்களை நாட்டுக்குள் அழைத்து வந்த 32 இஸ்லாமிய அமைப்புகள் குறித்து அரசாங்க உளவுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது

 

2005 முதல் 2019 வரை 1,800 இஸ்லாமிய போதகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அரசாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், உளவுத்துறை வட்டாரங்களின்படி, சந்தேக நபர்கள் இஸ்லாமிய மார்க்க போதனைகளை வழங்குவதற்காக பேருவளை, அக்கரைப்பற்று, காத்தான்குடி, மாதம்பே மற்றும் மூதூர் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்ததாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.