மாணவி ஒருவரின் அவசர அழைப்பிற்கு 185ஆவது தொலைபேசி அழைப்புக்கு பின் பதிலளித்த கல்வி அமைச்சு!

மாணவி ஒருவரின் அவசர அழைப்பிற்கு 185ஆவது தொலைபேசி அழைப்புக்கு பின் பதிலளித்த கல்வி அமைச்சு!

மாணவி ஒருவரின் அவசர அழைப்பிற்கு 185ஆவது தொலைபேசி அழைப்புக்கு பின் பதிலளித்த கல்வி அமைச்சு!

மாணவியொருவர் அவசர தேவையொன்றுக்கான பதிலை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை கல்வி அமைச்சுக்கு 185 தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட நிலையில், 186வது தொலைபேசி அழைப்பின் போதே, பதில் கிடைத்துள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.


அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்றைய தினம் (12) இவ்வாறு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார்.


நேற்று காலை முதல் மாலை வரை மேற்கொண்ட முயற்சியின் ஊடாகவே, 186ஆவது தொலைபேசி அழைப்புக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.


கல்வி அமைச்சின் உரிய பிரிவினரை தொடர்புக்கொள்வதற்கு காலை 9.00 மணி முதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், 185 அழைப்புக்களுக்கு எந்தவொரு நபரும் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.


$ads={1}


குறித்த மாணவி, மூன்று தொலைபேசிகளின் ஊடாக கல்வி அமைச்சை தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ளதாக அறிய முடிகின்றது.


எனினும், 186வது அழைப்பை ஏற்க பெண் அதிகாரியொருவர், குறித்த மாணவிக்கு பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Source: https://divaina.com/daily/index.php/puwath-2/55657-2021-03-12-13-32-61


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.