ஜனாஸா எரிப்பை உடனடியாக கைவிடுங்கள்! இல்லையேல் சகல இன மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா எரிப்பை உடனடியாக கைவிடுங்கள்! இல்லையேல் சகல இன மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பர்!

ஜனாஸா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும். இல்லை எனில் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றது என்பதன் வெளிப்பாடு தான் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட அனுமதி அளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ‌ வழங்கிய வாக்குறுதியை நிராகரித்து, தொற்று நோய் தடுப்பு இராஜாங்க அமைச்சரும் கொரோனா கட்டுப்பாட்டு விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயம் பல தடவை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகமோ, பிரதமர் செயலகமோ உத்தியோகபூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும்.

ஜனாஸாக்கள் எரிக்கப்படுமானால் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை உறுதிப்படுத்தப்படும்.

எவ்வாறானாலும் இத்தகைய விடயங்களில் அரசாங்கம் ஒருமித்து செயற்படவேண்டும். சமூக அமைப்புக்களும் நாடாளுமன்ற பிரதிநிதிகளும் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.