வயோதிபர் திடீர் மரணம்; நகரப்பகுதி முற்றாக முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வயோதிபர் திடீர் மரணம்; நகரப்பகுதி முற்றாக முடக்கம்!


மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த  79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா  வைரஸ் தொற்றுள்ளமை இன்று (16) கண்டறியப்பட்டுள்ளது.


$ads={2}


இதனையடுத்து மட்டக்களப்பு நகரப் பகுதி முடக்கப்பட்டு, வீதிகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.


குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில், நேற்று இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து, சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் குறித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உயிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.