கை டிராக்டருக்கு சிக்குண்டு பலியான 09 மாத கைக்குழந்தை!

கை டிராக்டருக்கு சிக்குண்டு பலியான 09 மாத கைக்குழந்தை!

மொராகட மஹதிவுல்வெவ பிரதேசத்தில் கை டிரக்டரின் அடியில் சிக்கி குழந்தையொன்று பரிதாபமாக இறந்துள்ளது.

தாயும் அவரது குழந்தையும் கை டிராக்டரின் பின்புறத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, மேடொன்றில் குறித்த கை டிராக்டர் வண்டி சென்றுள்ளது. தவறுதலாக குழந்தை கை நழுவி வாகனத்தின் கீழ்ப்பகுதிக்குள் விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}

டிராக்டரின் கீழ் விழுந்து பலத்த காயமடைந்த குழந்தை யக்கல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் இறந்துள்ளது.

இறந்த குழந்தை நமல்புர பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத குழந்தை என தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பாக கை டிராக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post