கல்முனையில் பல பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்முனையில் பல பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்!


கல்முனை செய்லான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஜி. சுகுணன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன் தலைமையிலான சுகாதார பிரிவினர் பார்வையிட்டுள்ளனர்.


கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று (28) இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை காவல்துறையினர் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


$ads={1}


இன்று காலை கல்முனை பொதுச் சந்தை, கல்முனை பஸார், கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தகர்களுக்கு மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், தொற்றாளர்களை இணங்கான்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.