கழுத்தில் ஊஞ்சல் கயிறு சிக்குண்டு சிறுமி பலி!

கழுத்தில் ஊஞ்சல் கயிறு சிக்குண்டு சிறுமி பலி!

யாழ்ப்பாணம் - கோயில் வீதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சிறுமி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.


$ads={2}

ஊஞ்சலில் போடப்பட்ட முடிச்சினை அவிழ்க்க முற்பட்டபோது கதிரையிலிருந்து விழுந்தபோது கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது.

வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தொங்கி கொண்டு இருப்பதனைக் கண்டு அவரை மீட்டு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தார். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி நேற்று உயிரிழந்தார்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post