பச்சை மீன் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்! அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

பச்சை மீன் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்! அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!


பச்சையாக மீன் சாப்பிடுவதால் பல நோய்கள் ஏற்படக்கூடும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.


மீன்களின் தோலில் உள்ள பாக்டீரியா மற்றும் நுண்ணுயிரிகள் செரிமான அமைப்பை கடுமையாக சேதப்படுத்தும் என்று மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.


நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வேதராச்சி, பச்சை மீன் சாப்பிட்டு காட்டியது இந் நாட்டின் குழந்தைகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாகும் என்று வைத்தியர் சுட்டிக்காட்டினார்.


$ads={2}


மேலும் மீன்களைக் கழுவி, சுத்தம் செய்து, சமைக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.


இருப்பினும், பச்சை மீன் சாப்பிடுவது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய சுட்டிக்காட்டுகிறார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post