இலங்கை வரவுள்ள இஸ்லாமியர்களினால் சமூக மட்டத்தில் கோரோனா பரவும் அபாயம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

இலங்கை வரவுள்ள இஸ்லாமியர்களினால் சமூக மட்டத்தில் கோரோனா பரவும் அபாயம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்


இலங்கையில் சமூகங்கள் இடையே மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.முனசிங்கவுக்கு அந்த அமைப்பு நேற்று அனுப்பியுள்ளது.

இதில் போரா இஸ்லாமிய பிரிவை செய்த பலர் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

மும்பையில் இருந்து 54 பேரும், டுபாயில் இருந்து 8 பேரும் இவ்வாறு இலங்கை வரவுள்ள நிலையில், சாதாரண மக்களுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனையோ அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாடோ இவர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாலைதீவு மற்றும் சீஷல்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு பல நோயாளர்கள் மருத்துவ தேவைக்காக வந்துள்ளனர். அவர்களுக்கும் எந்தவித பரிசோதனையும் விமான நிலையத்தில் நடத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


$ads={1}

அதுபோக, இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கு அவரது நாட்டிற்கு சென்று மீண்டும் இலங்கை வரும் சந்தர்ப்பத்தில் எந்தவித பரிசோதனையும் செய்யப்படுவதில்லை.

இந்த வசதிகள் வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இது சமூக மட்டத்தில் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post