வாக்காளர்களின் அவதானத்திற்கு! – தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வாக்காளர்கள் வாக்களிக்கும் போது மிகவும் அவதானத்துடன் புள்ளடியிடுமாறும், வாக்குச் சீட்டில் தவறு நிகழ்ந்தால் புதிய வாக்குச் சீட்டு வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தவறு இடம்பெற்றதற்காக வாக்களிப்பு நிலையப் பொறுப்பு அதிகாரியிடம் பதில் வாக்குச் சீட்டை கோர வேண்டாம் எனவும், அவ்வாறு இரண்டாவது வாக்குச் சீட்டை பதிலாக வழங்குவதற்கு அவ்வதிகாரிக்கு அதிகாரம் இல்லையெனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்களிக்க வரும் வாக்காளர், குறித்த வாக்காளர்களுக்கு நிதானமாக சிந்தித்து வாக்கைப் பயன்படுத்துமாறும், விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்புவோர் நிதானமாக அதனை பிரயோகிக்குமாறும் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.