கோட்டாபயின் வெற்றி அமோகமாக இருக்கும்.! - மகிந்த நம்பிக்கைஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றிப்பெறுவார் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (06) மாலை முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிலின் வருடாந்த தேர் உற்சவத்தில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அவர் போட்டியிட்டு வெற்றிப் பெறுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தம்மாலும் எதிர்தரப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும் , ஆனால் தாம் அவ்வாறு செய்ய போவதில்லை எனவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி பெற வேண்டுமால் மக்கள் மத்தியில் சென்று வெற்றிப்பெற வேண்டும் எனக்கூறிய அவர் , மாறாக நீதிமன்றத்தை நாடி வெற்றியை ஈட்ட முடியாது எனவும் கூறியுள்ளார்.

தோல்வியடைய போகின்றோம் என்பதால் எதிரணி கடும் அச்சத்தை எதிர்க் கொண்டுள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

மேலும் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும், நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கையிருந்த போதிலும் இரண்டாவது தெரிவாகவே நாம் அவரை கட்டுப்பணம் செலுத்த வைத்ததாகவும் மகிந்த இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.