இன்று இரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கோட்டாபய இடையிலான பேச்சுவார்த்தை!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03) இரவு நடைபெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி. அறிவித்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.


கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சின்னம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைக்கு தீர்வு கண்டு முடியுமான வரை அவருக்கு ஆதரவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.