இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவுக்காக முஸ்லிம்களின் மத வழிபாடுகள்!

இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிகழ்வினை முன்னிட்டு இஸ்லாம் மத ஆசிர்வாத வழிபாடுகள் கொழும்பு 03 இல் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று (03) இராணுவ முஸ்லிம் சங்கத்தின் பூரண ஏற்பாட்டுடன் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டார்.

இவரை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா , ஜூம்மா பள்ளிவாசலின் தலைவரான அல் – ஹாஜ் முகமட் மற்றும் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கொள்ளுபிடி ஜூம்மா பள்ளியின் பிரதான மௌவியான சல்மன் இசடீன் மற்றும் மௌவி ஆதம் பாவா முகமட் ரிஷ்வானின் தலைமையில் இராணுவ கொடிகளுக்கான ஆசிர்வாத மத வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து இந்த பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு பள்ளியின் நிருவாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இராணுவ தளபதியின் பள்ளியின் தலைவர் ஹாஜ் முகமடுக்கு நினைவுச் சின்னம் ஒன்று பரிசாக வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். பின்பு பள்ளியின் செயலாளர் அல் ஹாஜ் ஐ.எஸ். ஹமீடினால் இராணுவ தளபதிக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த சமய நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவ தொண்டர் படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராணுவ கொடி ஆசிர்வாத நிகழ்வுகள் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலும், அநுராதபுர ஶ்ரீ மஹா போதியிலும் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.