சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை மாணவனுக்கு தங்கப்பதக்கம்!

ஹொங்க்கொங்கில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை மாணவரான ரொஹான் ஆதித்ய வீரகோன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

குறித்த வெற்றியை அடுத்து ஜப்பானில் நடைபெறவுள்ள உலக சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்கு ரொஹான் ஆதித்ய வீரகோன் தகுதி பெற்றுள்ளார்.

குறித்த போட்டி டிசம்பர் மாதம் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறவுள்ளது.