JVP உறுப்பினர்கள் மாத்திரமே குற்றமிழைக்காதவர்கள்- விஜித ஹேரத் எம்.பி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளூராட்சித் தலைவர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஏதாவது ஒரு குற்றத்தில் ஈடுபட்டவர்களாக காணப்படுவதாகவும், ஊழல் இல்லாமல் மக்களின் நலனுக்காக அரசியலில் ஈடுபடுவது மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ​ஹேரத் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளியில் மோதிக் கொள்ளும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதேச சபையினுள் ஒன்றாக இணைந்து திருடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.