இலங்கை கிரிக்கெட்டின் Cricket Aid நிறுவன கணக்கை இடைநிறுத்தி விசாரணை நடத்துமாறு COPE குழு அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட்டின் Cricket Aid நிறுவனத்தின் கணக்கை இடைநிறுத்தி விசாரணை நடத்துமாறு COPE குழு கணக்காய்வாளருக்கு அறிவித்துள்ளது.

COPE குழு முன்னிலையில், இலங்கை கிரிக்கட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா மற்றும் நிறைவேற்றுக்குழுவின் அங்கத்தவர்கள் சிலர் முன்னிலையாகிருந்தனர்.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா மற்றும் உப தலைவர் ரவீன் விக்கிரமரத்ன ஆகியோர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளமையால், அவர்கள் இன்று COPE குழுவில் முன்னிலையாகவில்லை.