கோட்டாவின் வாக்குரிமை, குடியுரிமை தொடர்பில் CID விசேட விசாரணை!

பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்த போது ஹம்பாந்தோட்டை, மெதமுலன வாக்காளர் இடாப்பில் பெயர் உள்வாங்கப்பட்ட விதம் மற்றும் தற்போது அவர் இலங்கை கடவுச் சீட்டைப் பெற்றுக்கொண்ட முறைகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனயவுப் பிரிவின் சிறப்புக் குழு இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.