மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் போராட்டம்!

புத்தளம், முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வம்பிவட்டவான் பகுதியில், மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் பிரதேச மக்களால் இன்று (10) காலை முன்னெடுக்கப்பட்டது.

பூனைப்பிட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள வம்பிவட்டவான் பகுதியில் காணப்படும் தனியார் காணியில் குளம் தோண்டும் போர்வையில் சிலர் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

அத்தோடு, அகழப்படும் மணலை புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீதியின் ஊடாக வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லும்போது வீதிக்கு சேதம் ஏற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.