சாத்தான் தூண்டியதால் சிறுமியை வன்புணர்ந்தேன் – பாதிரியார் அதிர்ச்சி வாக்குமூலம்!

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் கெய்தஸ்பர்க் நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஆக்டேவியோ காண்டரிரோ (வயது 42). 
தேவாலயத்துக்கு தினந்தோறும் வந்துசெல்லும் சிறுமி ஒருவர் பெற்றோர், உறவினர்கள் என யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருவதை அவர் தெரிந்து கொண்டார்.
இதையடுத்து அந்த சிறுமியிடம் சிறு வயதில் தனியாக இருக்க கூடாது என்று கூறி, அவருக்கு தேவாலயத்தின் உள்ளேயே ஒரு சிறிய அறையை ஒதுக்கி தங்க வைத்து கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்ற ஆக்டேவியோ காண்டரிரோ அவரை கற்பழிக்க முயன்றதாக தெரிகிறது.
ஆனால் சிறுமி அவரிடம் இருந்து தப்பிவிட்டார். இதையடுத்து, இந்த வி‌‌ஷயம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டிய ஆக்டேவியோ காண்டரிரோ சிறுமிக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்துக்கு மேல் பாதிரியாரின் கொடுமையை தாங்க முடியாத சிறுமி கடந்த மே மாதம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த வாரம் ஆக்டேவியோ காண்டரிரோவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் ஆக்டேவியோ காண்டரிரோ தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்தார். மேலும் அவர் போலீசாரிடம் ‘‘சிறுமியின் உடலில் குடிகொண்டிருக்கும் சாத்தானே என்னை இவ்வாறு செய்ய தூண்டினான்’’ எனக் கூறினார்.
இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, சிறுமியை போல் ஆக்டேவியோ காண்டரிரோவினால் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களை அணுகி புகார் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளார்