மொறட்டுவை கொலை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை உறுதியானது!

மொறட்டுவை பிரதேசத்தில் ஒருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மொறட்டுவை, எகொட உயன சந்தியில் கூரிய ஆயுதங்களினால், தாக்கி குற்றவாளிகள் ஒருவரை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகள் பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி வீரமன் சேரசிங்க முன்னிலையில் இன்று நடைபெற்றது.

வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் நான்கு பேரை வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.