யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களின் வன்முறைகள்! – நவாலியில் சம்பவம்

நவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த பொருள்களை அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இன்று (08) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

இரு மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 பேர் கொண்ட கும்பலே வீட்டில் இருந்தவர்களை வாள்களைக் காண்பித்து மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருள்கள், தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.