ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நாளை முதல்..

சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தினங்களில் உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலக தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.