ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று நள்ளிரவு எதிர்பார்க்கலாம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை இன்று (09) நள்ளிரவு முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியிடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டுமென்பது 100 சதவீதம் உறுதியாகிள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலானது கட்டாயம் நவம்பர் 10ஆம் திகதிக்கும் டிசம்பர் 8ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.