கோட்டாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் களமிறக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கதிரை சின்னத்திலோ, பொதுச் சின்னம் ஒன்றிலோ போட்டியிட முன்வருவதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் இதனை எடுத்துக் கூறியதாகவும், நிபந்தனைக்கு உடன்பட்டால் அவருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.