பக்கத்தில் இருக்கும் திருடர்களைக் கூட ஜனாதிபதி பிடிக்கவில்லை! -அர்ஜுன ரணதுங்க

yazh news
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அருகாமையில் இருக்கும் திருடர்களைக் கூட பிடிக்கவில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.

இது மிகவும் பாரதூரமான ஓர் நிலைமையாகும் எனவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கை கிரிக்கட் வரலாற்றில் கறுப்பு புள்ளி ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் இலங்கைக்கு எதிராக கிரிக்கட் தடை விதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் சபையின் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே கிரிக்கட் துறையில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி கூறிய போதிலும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கள்வர்களை தனது மேடையில் வைத்துக் கொண்டே ஊழல்மோசடிகளை தடுக்கப் போவதாக ஜனாதிபதி வீரவசனம் பேசி வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-Tamilwin