சஜித்தின் உரையாடலின் போது மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர்!

அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, முன்னாள் அமைச்சர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன என்பவரே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர சஜித் பிரேமதாஸ உரையாற்றும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேடையில் அமர்ந்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் திடீரென மயக்கமடைந்துள்ளார். தற்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் காரணமாக நிகழ்வில் பரபரப்பு நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.