கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை!

சீரற்ற காலநிலை தொடர்பில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளதாவது; ஹிக்கடுவ இல் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற் பிரதேசத்தில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்காக இந்த காலநிலை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

விசேடமாக 2019 செப்டெம்பர் 19 ஆம் திகதியான இன்று காலை 10 மணி அளவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மாலை 3 மணி வரையில் இந்த சீரற்ற காலநிலை நிலவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தென் மேற்கு பிரதேச கடற் பகுதியில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பின் காரணமாக ஹிக்கடுவயில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற் பிரதேசத்தில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் கடும் மழை மற்றும் கடும் காற்று வீசக்கூடும்.

மணித்தியாலத்துக்கு 75 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் திடீரென காற்று வீசக் கூடிய நிலை காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் கொந்களிப்புடன் காணப்படும்.

இதன் காரணமாக கடற் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். இந்த நிலை மாலை 3 மணி வரை நீடிக்கக்கூடும் என்று இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.(அ)

-தகவல் திணைக்களம்-