சிறுவர்களின் கல்விக்காக பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும்! -கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டில் இலவச கல்வி நடைமுறையில் இருந்தாலும் இலவச கல்விக்காக ஒதுக்கப்படும் பணம் போதுமானதாக இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் முன்னேறிச் செல்ல எமது சிறுவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்காவிடின் எமக்கு எதிர்கால பொருளாதார திட்டம் தொடர்பில் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்விக்காக பாரிய அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பாலர் பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் மிகவும் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.