தெரிவுக் குழு இறுதி அறிக்கை தயாரிக்க முஸ்தீபு, நாளை உறுப்பினர்கள் கூட்டம்!

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர்களின் முக்கிய கூட்டமொன்று நாளை (02) இடம்பெறவுள்ளதாக அக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தெரிவுக் குழு இவ்வளவு நாட்களாக மேற்கொண்ட விசாரணைகளின் இறுதி அறிக்கை தயாரிப்பது தொடர்பிலும், அதற்கான நியதிகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய பதிலை வைத்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.