மொட்டு தவிர்ந்த வேறு எந்த சின்னத்திற்கும் எனது ஆதரவை வழங்குவேன்! -தயாசிறி

மொட்டு சின்னத்தை தவிர்ந்து வேறு எந்த சின்னத்திலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (08) குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடையும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.