பிணை காலம் நிறைவுற்று மீண்டும் சிறைக்கு செல்லும் நளினி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து தற்போது பிணையில் வெளியில் வந்துள்ள நளினியின் பிணை இன்றுடன்  (15) முடிவடைந்துள்ளது.

நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பிணையில் வந்திருந்தார்.

இந்நிலையில், தனது பிணை காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு அதிகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு மேலும் மூன்று வாரங்கள் பிணை காலம் நீடிக்கப்பட்டது.

அதன்படி இன்றுடன் அவரது 51 நாட்கள் பிணை காலம் நிறைவுக்கு வந்துள்ளதுடன் அவர் மீண்டும் சிறைக்குச் செல்கின்றார்.