ரணில், கரு மற்றும் சஜித் ஆகியோரை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவேன்! – மஹிந்த

என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கவதற்காக கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் இன்று முழுநாட்டிற்கும் சாபக்கேடாகியுள்ளது என எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜகபக்ஸ தெரிவித்துள்ளார்.

நவம்பர் 16ஆம் திகதி கிடைக்கப்பெறும் மக்கள் ஆணை அதிகாரத்துடன் ரணில், கரு, சஜித் ஆகியோரை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவு துறையின் தேசிய மாநாடு நேற்ற (24) கொழும்பிலுள்ள தேசிய கண்காட்சி காட்சிப்படுத்தல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் அந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நடுத்தர மக்களின் தேவைக்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த அரசாங்கத்தில் கூட்டுறவு அமைப்புக்கள் பலப்படுத்தப்பட்ட பல செயற்திட்டங்கள் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டன. திட்டங்களின் உச்ச பயனை நாட்டு மக்கள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்று நிலைமை முழுமையாக மாற்றமடைந்து விட்டது அரசியல்வாதிகளின் பரிந்துரை கிடைத்தால் மாத்திரமே சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்ற கேள்வி எழும் அளவிற்க அரசியல் பலவீனமடைந்துள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது சுட்டக்காட்டினார்.

(தகவல் – வீரகேசரி)