நிட்டம்புவயில் கொள்ளையடித்த மூன்று சந்தேகநபர்கள் ஒரு வருடத்தின் பின் கைது!

நிட்டம்புவ எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நான்கரை லட்சம் ரூபாய் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் மூவர் ஒரு வருடத்தின் பின்னர் பொலிஸாரினால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ ஓசர்ட்வத்தை பிரதேசத்தில் வைத்தே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிட்டம்புவ ஹொரகொல்ல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் ஒருங்கே 23, 30 மற்றும் 40 வயதையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-DailyCeylon