ரயில் விபத்தில் தாய் மற்றும் மகன் பலி!

அம்பலாங்கொடை, கந்தேகொட பகுதியில் பாதுகாப்பின்றி ரயில் கடவையில் பயணித்த வேன் ஒன்றின் மீது ரயில் மோதி இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மற்றுமொரு மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.