நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறைக்கப்படக் கூடாது.! ஆறுமுகன் தொண்டமான்

நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் அமைந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருக்க வேண்டும் எனவும் அதன் ஊடாகவே சிறுபான்மை சமூகத்தினர் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

மேலும் நாட்டை ஆட்சி செய்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் 32 பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரச்சினைக்களுக்கு தீர்வு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.