மதுபானம் அருந்துவதற்காக பணம் பெற மனைவியை விலைமாதுவாக்க முயற்சித்த நபர் ஆயுதத்துடன் கைது!

தனது மூன்று வயது பெண் பிள்­ளையின் உள்­ளா­டையை அணி­வித்து, தனது மனை­வியை அரை நிர்­வா­ண­மாக வீதி­யோ­ரத்தில் நிறுத்தி, பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­மாறு வற்­பு­றுத்­தி­ய­தாகக் கூறப்­படும் ஒரு­வரை சந்­தே­கத்தின் பேரில் பண்­டா­ர­கம பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

பண்­டா­ர­கம கொத்­த­லா­வல பிர­தே­சத்தில், கையில் கூரிய ஆயுதம் ஒன்றை ஏந்­திய நபர் ஒருவர், அரை நிர்­வா­ண­மாக நிற்கும் பெண் ஒரு­வரை அச்­சு­றுத்­து­வ­தாக முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒரு­வரால் கௌனி­கம வீதியில் ரோந்து கட­மை­யி­லி­ருந்த பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய, குறித்த பொலி­ஸாரால் சந்­தேக நபர் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். கைது­செய்­யப்­பட்­டவர், மின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­வரும் 38 வய­தான ஒரு­வ­ராவார்.

இதற்கு முன்னர் இரண்டு திரு­ம­ணங்­களை முடித்­தி­ருந்த இந்த சந்­தே­க­நபர், தவ­றிய அழைப்­பொன்றின் ஊடாக நிக்­க­வெ­ரட்­டிய பிர­தே­சத்­தி­லுள்ள பெண் ஒரு­வ­ருடன் சுமார் 5 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பழக்கம் ஏற்­பட்டு, மூன்­றா­வது தார­மாக அவ­ரையும் மணந்­து­கொண்டு கொத்­த­லா­வல பிர­தே­சத்தில் வசித்து வந்­துள்­ள­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்தத் திரு­மணத் தொடர்பின் மூலம் இவர்­க­ளுக்கு, மூன்று வய­தான மக­ளொ­ரு­வரும், ஒரு வய­தான மக­னொ­ரு­வரும் உள்­ளனர். தினமும் மது­பானம் அருந்­தி­வரும் இந்­நபர் தனது மனை­வியை துன்­பு­றுத்­தி­வந்­துள்­ள­தா­கவும், அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு கிடைத்த முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய சில சந்­தர்ப்­பங்­களில் அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நபர் சில நேரங்­களில் தனது மனை­வியின் உள்­ளா­டைகள் மற்றும் ஆடை­களை அணிந்­த­வாறு பெண்­களைப் போன்று வீதி­களில் நிற்­ப­தையும் பழக்­க­மாகக் கொண்­டி­ருந்­த­தா­கவும், பின்னர் அப்­ப­ழக்­கத்தை கைவிட்ட அவர், அண்மைக் கால­மாக தனது மனை­வியை அடித்து துன்­பு­றுத்தி, மூன்று வயது பிள்­ளையின் உள்­ளா­டையை அணி­வித்து வீதி­யோ­ரத்தில் நிறுத்தி, பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­மாறு வற்­பு­றுத்­தி­யுள்ளார். மது­பானம் அருந்­து­வ­தற்கு பணம் தேடித்­த­ரு­மாறு கூறியே அவரை இவ்­வாறு அச்­சு­றுத்­தி­வந்­துள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில், பண்­டா­ர­கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் கே. டபிள்யூ.எல். விக்ரமரத்னவின் அறிவுறுத்தலுக்கமைய, சிறுவர் மற்றும் மகளிர் விவகார பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் அனுஷா ஹேமமாலி, பொலிஸ் சார்ஜன்ட் எதிரிசிங்க ஆகியோர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

-metronews