ஈஸ்டர் தாக்குதலுக்கு வெடிப்பொருட்களை வழங்கிய பொதுபல சேனா?

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களை வழங்கியதில் பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அந்த அமைப்பின் ஊடக அதிகாரி சம்பந்தப்பட்டுள்ள சர்வதேச புலனாய்வு சேவை ஒன்று, இலங்கை அரச பாதுகாப்பு தரப்பனிருக்கு வழங்கிய இரகசிய தகவல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துமாறு கோரி, பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஒரு வாரத்திற்கு பின்னர் வெளிநாட்டு புலனாய்வு சேவை, இந்த தகவலை இலங்கை அரச பாதுகாப்பு தரப்புக்கு வழங்கியிருப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அப்படியான செயலை செய்திருக்காது என தீர்மானித்து, இலங்கை அரச பாதுகாப்பு தரப்பினர் அதனை பொருட்படுத்தால் இருந்தாலும், குறித்த சர்வதேச புலனாய்வு சேவை உலக முழுவதும் இந்த தகவலை வழங்கியிருப்பதால், தமது அமைப்புக்கும் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக கூறப்படும் நபர்களுக்கும் சர்வதேச ரீதியில் கடும் அசௌகரியமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்புக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என்பதால், சர்வதேச புலனாய்வு சேவை தகவலை விநியோகித்த விதம் மற்றும் அதற்கு ஈஸ்டர் தாக்குதலுக்கும் இடையிலான தொடர்புகளை விரிவான விசாரணை செய்யுமாறு பொதுபல சேனா, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு நடந்த மிகவும் பயங்கரமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுடன் பொதுபல சேனாவை சம்பந்தப்படுத்தும் சர்வதேச சதித்திட்டங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

திலந்த விதானகே இது சம்பந்தமாக ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமும் இதனை தெரியப்படுத்தியிருந்தார்.

#tamilwin