ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (31) செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஏனைய கட்சிகள் தமது வேட்பாளரை அறிவிப்பதில் அவசரம் காட்டினாலும் ஐக்கிய தேசியக் கட்சி அவசரப்பட தேவையில்லை.

நாங்கள் எங்களது பயணத்தை மேற்கொள்வோம். எவரும் குழப்பமடைய தேவையில்லை. எமது வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

இதனை நான் எதிர்க்கட்சியினருக்கு கூறுகிறேன். வேட்பாளர் யார் என்பதை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானித்து விட்டோம்.

உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.