பசில் ராஜபக்ஷ இலங்கையில் ஜனாதிபதியாவார்! பிரபல ஜோதிடர் வெளியிட்ட தகவல்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவார் என பிரபல ஜோதிடர் இந்திக்க தொடவத்த தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு சிறிதுகாலம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுடன் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.

பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது. பசில் ராஜபக்ஷவின் இராஜயோகம் மற்றும் அவருக்கு இருக்கின்ற சாத்தியமான விடயங்களின் ஊடாக கோத்தபாயவுக்கு சந்தர்ப்பம் உருவாகலாம்” என கூறியுள்ளார்.

இதேவேளை, ஜோதிடர் இந்திக்க தொடவத்த என்பவர் பிறப்பிலேயே கண் தெரியாதவர்.

கடந்த ஆட்சிமாற்றம், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டாலும் ஆசனத்தில் அமரமுடியாமல் மீண்டும் பதவியை இழப்பார் போன்ற முக்கிய ஆருடங்களை வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.