வெளியாகியது Appleஇன் மூன்று அசத்தல் ஐபோன்கள்!

அப்பிள் நிறுவனம் இந்த வருடம் தங்களின் புதிய ஸ்மார்ட்தொலைபேசிகளை இன்று (11) அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில், அப்பிள் நிறுவன அலுவலகத்தின் ஸ்டீவ் ஜொப்ஸ் அரங்கில் 2019 அப்பிள் நிறுவனத்தின் (Apple September Event 2019) ஐபோன் தெரிவு ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அப்பிள் நிறுவன சேவைகளின் பல்வேறு அறிவிப்புக்களும் வெளியாகியுள்ளன.

Apple at its iPhone 11 launch event launched a new iPad model:

அப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஒளிப்படங்களை எடுக்க 12 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சாராகும். ஒளிப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் இதுவரை வெளியான ஸ்மார்ட்தொலைபேசிகளில் அதிக சிறப்புவாய்ந்ததாகும் .

புதிய ஐபோன் 11 தெரிவில் இதுவரை வெளியான ஸ்மார்ட்தொலைபேசிகளை விட அதிக திறன் கொண்ட கிராஃபிக்ஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் முந்தைய ஐபோன்  XR தெரிவைவிட ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. புதிய ஐபோன் 11 விலை 699 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்கிவாய்ந்த ஐபோன் தெரிவாக ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் மூன்று பிரைமரி கமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் அப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ தெரிவில் ஐபோன் XS மேக்ஸ் தெரிவைவிட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஒளிப்படங்களை எடுக்க 12 எம்.பி. வைடு கமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கமரா வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மென்பொருள் அப்டேட் மூலம் விரைவில் வழங்கப்படவுள்ளது.

இது ஒளிப்படங்களை அழகாக்க ஒன்பது படங்களை ஒன்றிணைத்து சிறந்த ஒளிப்படத்தை அதிவேகமாக வழங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஐபோன் 11 ப்ரோ தெரிவின் விலை 999 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

டிம் குக் இன் அறிமுக உரையுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில், அப்பிள் ஆர்கேட் கேமிங் சேவை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்பிள் ஆர்கேட் சேவை இம் மாதம் 19 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படுகிறது. அப்பிள் ஆர்கேட் சேவை App Store இல் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிள் ஆர்கேட் கேமிங் சேவையுடன் பல்வேறு புதிய கேம்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

அப்பிள் ஆர்கேட் சேவையில் ஒவ்வொரு மாதமும் புதிய கேம் சேர்க்கப்படவுள்ளதாக அப்பிள் அறிவித்துள்ளது. இவற்றில் சில கேம் இன்று முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேம்களை வழங்க அப்பிள் நிறுவனம் பல்வேறு கேமிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த சேவைக்கான மாத கட்டணம் 499 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

ஆர்கேட் கேமிங் சேவையுடன் அப்பிள் டி.வி. பிளஸ் 100 நாடுகளில் கிடைக்கும். இதற்கான மாத கட்டணம் 4.99 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று அறிமுகம் செய்யப்படும் அப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு அப்பிள் டி.வி. பிளஸ் சேவை இலவசமாக வழங்கப்படும் என அப்பிள் அறிவித்துள்ளது.

அப்பிள் நிறுவனம் 2019 ஐபேட் தெரிவுகளை அறிமுகம் செய்தது. இதில் இருமடங்கு வேகமான பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் வாங்குவோருக்கு அப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஐபேட் ஆரம்ப விலை 329 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அப்பிள் வாட்ச் சாதனத்தில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வாட்ச் சீரிஸ் 5 தெரிவின் திரை எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய அப்பிள் வாட்ச் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. இதனுடன் பில்ட் – இன் காம்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேம்பட்ட புதிய மேப்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் ஆபத்து காலத்தில் எச்சரிக்கை கொடுக்கும் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் அப்பிள் நிறுவனம் இன்னோவெசன் என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொடுத்து ‘By Innovation Only’ என்று இந்த வருடம் அழைப்பிதல் ஒன்றையும் வெளியிட்டுள்து.

எவ்வாறாயினும் புதிதாக வெளியாகியுள்ள இந்த ஐதொலைபேசிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறமை குறிப்பிடத்தக்கது.