சஹ்ரானின் கணினிக்கு என்ன நடந்தது? பல விடயங்கள் அமபலமாகின!

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி மொஹமட் சஹ்ரான் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மடிக்­க­ண­னியில் இருந்து பல முக்­கிய தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அதனை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

குறித்த மடிக் கணினி தற்­போது சி.ஐ.டி. பொறுப்பில் உள்­ள­தா­கவும், அது சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்­பாய்வு அறையில் விஷேட பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் மேலும் தெரி­வித்தார்.

குறித்த மடிக் கணினி, அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ. எனப்­படும் மத்­திய விசா­ரணைப் பிரி­வி­னரால் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக சிலர் தக­வல்­களை பரப்பி வரும் போதும், அந்த மடிக்­கணினி சி.ஐ.டி. பொறுப்­பி­லேயே உள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர உறுதி செய்தார்.

பயங்­க­ர­வாதி மொஹமட் சஹ்­ரானின் கல்­முனை பகுதி தொடர்­பா­ள­ராக செயற்­பட்ட கல்­முனை சியாம் என அறி­யப்­படும் சாவுல் ஹமீட் ஹமீஸ் அல்­லது அபூ ஹசன் என்­ப­வ­ரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட தடுப்புக் காவல் விசா­ர­ணை­களில் இருந்து பெறப்­பட்ட தக­வல்கள், தேசிய உள­வுத்­துறை தக­வல்­களை மையப்­ப­டுத்தி சஹ்­ரானின் மடிக்­க­ணினி கடந்த மே 31 ஆம் திக­தி­யன்று மீட்­கப்­பட்­டது.

கடந்த மே 22 ஆம் திகதி, தேசிய உளவுத் துறையின் தக­வல்­களை மையப்­ப­டுத்தி அம்­பாறை வலய சிறப்பு பொலிஸ் குழு கல்­முனை சியாம் எனும் சஹ்­ரானின் பிர­தான தொடர்­பா­ளரைக் கைது செய்­தி­ருந்­தது. அதன் பின்னர் குறித்த நபரை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான தடுப்புக் காவலில் வைத்து விசா­ர­ணை­களை பொலிஸார் ஆரம்­பித்­தனர்.

அதன்­படி கடந்த மே 28,29 ஆம் திக­தி­களில் 5,10 இலட்­சங்கள் என்ற ரீதியில் 15 இலட்சம் ரூபா பொலி­ஸாரால் முதலில் மீட்­கப்­பட்­டி­ருந்­தது. அத­னை­ய­டுத்தே மே 31 ஆம் திகதி கல்­முனை சியாமின் மனை­வியின் வீட்டில் இருந்து மேலும் 35 இலட்சம் ரூபா கைப்­பற்­றப்­பட்­டது.

கல்­முனை சியா­மிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­களில் பயங்­க­ர­வாதி சஹ்ரான் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் மடிக்­க­ணனி ஒன்று அக்­க­ரைப்­பற்று - பால­முனை களப்பில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­டது.

பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரான மற்­றொரு பயங்­க­ர­வாதி சைனிக்கு சொந்­த­மான பென் ட்ரைவ் ஒன்றும், வன் தட்­டொன்றும் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கல்­முனை சியா­மிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே மடிக்­க­ணனி தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

சி.ஐ.டி. பயங்கரவாதி சஹ்ரானின் மடிக்கணினி மற்றும் பயங்கரவாதி சைனியின் பென் ரைவ் உள் ளிட்ட வற்றை பொறுப்பேற்று பகுப்பாய்வு செய்து பல தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.