யால தேசிய பூங்கா மூடப்படுகின்றது!

வறட்சியுடனான வானிலை நிலவுவதுடன், பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக யால தேசிய பூங்கா இன்று(01) முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள யானைகளின் கணக்கெடுப்பிற்காக செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அனைத்து தேசிய பூங்காக்களும் மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.