நாட்டி பல இடங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுப்பு!

இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை பிரதேசங்களுக்கு மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது மண்சரிவு முன்னெச்சரிக்கையை கட்டட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது. இதேவேளை, மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான கடற் பிரதேசங்களில் மீன்பிடிப்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஆபத்துக்கள் காணப்பட்டால், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்குமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளதுடன் 117 என்ற குறுந் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் அனர்த்தம் குறித்து அறிவிக்க முடியும்.