சர்வதேச கபடிப்போட்டியில் சாதனை படைத்த ஈழத்து மாணவி!

சர்வதேச கபடிப்போட்டியில் இலங்கை அணி சார்பாக தடம்பதித்த நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவி மங்கை பிரியவர்ணா சாதனை படைத்துள்ளார்.

இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவியும், மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக வீராங்கனையுமான செல்வி பிரியவர்ணா மற்றும் இளவாலை கான்வென்ட் பாடசாலை மாணவி டிலக்சனா ஆகியோர் சர்வதேச கபடிப்போட்டியில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றிருந்தனர்.

இருவரும் தென்கொரியாவில் நடைபெற்ற 8 நாடுகள் கலந்து கொண்ட கபடிப் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக இரண்டு தமிழ் வீராங்கனைகள் தடம்பதித்து தமிழ் மக்களுக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

தென்கொரியாவில் இடம்பெற்ற இந்த தொடரில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்று பெருமை சேர்ந்துள்ளது.

மேலும் இவ் அணியில் பிரியவர்ணா தனது திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணியின் முக்கிய வீராங்கனையாக திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது