இன்னும் சில நாட்களில் சஜித், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்!!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், செவ்வாய்கிழமை இரவு சஜித் பிரேமதாசா நடத்திய பேச்சுக்கள், சாதகமாக முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, மற்றும் ஹர்சா டீ. சில்வா ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

அடுத்துவரும் சில தினங்களில் சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரெனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.