ரணில் அனுமதிக்காவிடின், கழுகு சின்னத்தில் சஜித்!!

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவில்லை என்றால், புதிய கட்சியில் அவர் போட்டியிடுவார் என தான் பொறுப்புடன் கூறுவதாக மாத்தளை நகர மேயர் டன்ஜித் அலுவிஹார தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை பொருத்தமான நேரத்தில் நியமிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை மேற்கொள்வார் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சஜித் வருகிறார்” என்ற அடுத்த மக்கள் பேரணி, மாத்தளையில் நடத்த ஆயத்தங்கள் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவில்லை என்றால் அவர் கழுகு சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது