“நாம் எந்தவொரு சவாலையும் வெற்றி கொண்டே பழக்கப்பட்டவர்கள்”

நாம் நடாத்திச் செல்லும் சகல கூட்டங்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புக்கும் அதன் வளர்ச்சிக்குமுரிய கூட்டங்கள் எனவும், தனிநபர்களை போஷிக்கும் ஒன்றுகூடல்கள் அல்லவெனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

நாம் எந்தவொரு சவாலையும் வெற்றி கொண்டே பழக்கப்பட்டவர்கள். ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஏற்படும் தாமதம் தேர்தல் வெற்றியில் பாதிப்புச் செலுத்தாது. ஏனெனில், நான் புதிதாக மக்களுக்கு அறிமுகமாக வேண்டிய தேவையில்லை. நான் மக்களுடன் தினமும் இருப்பவன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யும் நடவடிக்கை தாமதமாவது பிரச்சார நடவடிக்கைகளுக்கு பாதிப்பானதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.