அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

எங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை எந்த நாடுகளுக்கு எதிராகவும் நாங்கள் முதலில் பயன்படுத்தமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான கொள்கையை எதிர் காலத்தில் மறுசீராய்வு செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ராஜ்நாத் சிங்கிற்கு மறைமுகமாக பதில் அளிக்கும் வகையில் அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கை எங்களுக்கு கிடையாது என பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் இன்று தெரிவித்துள்ளார்.

‘எங்களிடம் உள்ள ஆயுதங்களை பாகிஸ்தானின் தற்காப்புக்காகவே வைத்திருக்கிறோம். இந்தியாவை பொருத்தவரை அவர்களுடைய கொள்கையை மாற்றியமைத்துக்கொள்வது அவர்கள் கையில்தான் உள்ளது’ எனவும் ஆசிப் கபூர் குறிப்பிட்டுள்ளார்.